மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது.

Update: 2021-06-08 18:51 GMT
சென்னை,

தமிழக அரசு கேட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக வழங்கவேண்டும், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் (எச்.எல்.எப்.) பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துகளையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உள்பட நிதி பாக்கி முழுவதையும் உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும், பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை குறைக்கவேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏழுமலை, ஜி.கருணாநிதி, மாநிலக்குழு உறுப்பினர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்