ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு ‘காவிரி படுகையின் புனிதமும், செழுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்’.

Update: 2021-06-22 20:10 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்திருக்கிறது. அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் எந்தவிதமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படக்கூடாது என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகை நமக்கு உணவு வழங்கும் பூமி. அதனால் தான் அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி பா.ம.க. வெற்றி பெற்றது. அதன் புனிதமும், செழுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்