கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை

முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.

Update: 2021-06-24 15:03 GMT
சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டம் மாலை 7.30 மணியளவில் நிறைவடைந்தது. அந்த கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கருணாநிதியின் நினைவிடத்திலேயே அமர்ந்து அனைவரும் பேசி வருகின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்த உடன் நேராக கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்துள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்னும் சற்று நேரம் அங்கேயே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்