10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-03 12:59 GMT
கோப்புப்படம்
சென்னை, 

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ததுடன், அனைவரும் தேர்ச்சி என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. 

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது போல தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரியும், துணைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.   

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.  

மேலும் செய்திகள்