தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (திங்கள் கிழமை) பலத்தமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-04 18:43 GMT



சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கள்கிழமை) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இதுதவிர, பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்.

மேலும் செய்திகள்