சிமெண்ட் விலையேற்றம்: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-07-29 11:35 GMT
கோப்புப்படம்
சென்னை, 

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நாங்கள் விசாரணை நடத்த வரம்பு இல்லை என சிபிஐ தரப்பில் ஐகோட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்