டன்னுக்கு ரூ.2,755 போதுமானது அல்ல கரும்பு கொள்முதல் விலையை ரூ.4,500 ஆக உயர்த்த வேண்டும்

டன்னுக்கு ரூ.2,755 போதுமானது அல்ல கரும்பு கொள்முதல் விலையை ரூ.4,500 ஆக உயர்த்த வேண்டும் மத்திய-மாநில அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-08-25 22:16 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 2021-22-ம் ஆண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 900 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 755 மட்டுமே வழங்கப்படும். இந்த கொள்முதல் விலை போதுமானதல்ல.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2016-17-ம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2 ஆயிரத்து 750 கிடைத்தது. இப்போது ரூ.2 ஆயிரத்து 755 கிடைக்கும். 5 ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை ரூ.5 மட்டுமே உயர்ந்தால் உழவர்களின் வருமானத்தை எவ்வாறு இரட்டிப்பாக்க முடியும்?. சர்க்கரை ஆலைகளின் நலனில் காட்டும் அக்கறையை உழவர்கள் நலனில் மத்திய-மாநில அரசுகள் காட்டாததுதான் இந்த நிலைக்கு காரணம்.

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டால் தான் உழவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலையை உயர்த்தி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்