ஜெயலலிதா பல்கலைக்கழகம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மறியல் - கைது

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து நின்று அமளிஈடுபட்டனர் . பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2021-08-31 06:25 GMT


சென்னை

2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த & நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். 

அதில் விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

இதன்மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றம்.

2021ம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது  ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என கூறினார்.

தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்  அவையில் எழுந்து நின்று அமளிஈடுபட்டனர் . பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த நிலையில்  சென்னை, கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்  மறியலில்  ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்

மேலும் செய்திகள்