எம்.எல். சட்டப்படிப்புகளை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

7 வகையான எம்.எல். படிப்புகளை நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி சென்னை பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-01 00:15 GMT
சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்வித்துறை, முனைவர் படிப்புகளையும், எம்.எல். படிப்புகளையும் நடத்தி வருகிறது. இதில் 7 வகையான எம்.எல். படிப்புகள் தனிப் படிப்பாக (பிரைவேட் ஸ்டடியாக) நடத்தப்படுகின்றன. இந்த தனி படிப்புகள், தொலைதூர கல்விமுறை போல நடத்தப்படுகின்றன. இதுபோன்ற சட்டப்படிப்புக்கு இந்திய பார் கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவை ஏற்கனவே தடை விதித்துள்ளன. எனவே இந்தப் படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது.

இந்த எம்.எல். படிப்புகளை முடித்து, முனைவர் படிப்பை முடித்தவர்கள், சட்டக்கல்லூரி பேராசிரியர் பணிக்கு தங்களை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கல்வி கட்டணம்

அந்த வழக்குகளை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, வேலைவாய்ப்பு வழங்க மறுத்துவிட்டது. எனவே, அங்கீகாரம் இல்லாத, வேலைவாய்ப்பைத் தராத இந்த 7 வகையான எம்.எல். படிப்புகளை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

2020-21-ம் கல்வியாண்டில் 246 மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பிக் கொடுக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், வழக்குக்கு 4 வாரங்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை பல்கலைக்கழகம், தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்