எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

Update: 2021-09-06 06:44 GMT
சென்னை,

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்பக் குறைப்பாட்டை பயன்படுத்தி கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல், மாநிலம் முழுவதும் பணத்தைத் திருடியது. இக்கும்பல், தமிழகம் முழுவதும் சுமாா் 30 ஏடிஎம் மையங்களில் ரூ.1 கோடி வரை திருடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இக்கும்பலைக் கைது செய்ய சென்னை காவல்துறையின் அமைக்கப்பட்ட தனிப்படையினா் நடத்திய விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபடுவது அரியானாவைச் சோந்த கும்பல் என்பதும் 14 மாநிலங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் நூதன கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளது. 14 மாநிலங்களில் கொள்ளை நடந்துள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சென்னை காவல்துறையின் பரிந்துரையை விரைவில் மத்திய அரசின் உள்துறைக்கு, தமிழக உள்துறை அனுப்ப உள்ளது.

மேலும் செய்திகள்