பாரதியாருக்கு உரிய கவுரவம் கிடைக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

மகாகவி பாரதியாரின் 100-வது நினைவுதினத்தையொட்டி, ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-09-11 23:50 GMT
தன் வாழ்நாள் சிறிதெனினும் ஆற்றல் வாய்ந்த விதத்தில் தாக்கம் ஏற்படுத்திய சுப்ரமணிய பாரதி, நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகவும், முகமாகவும் ஆனவர். அளப்பரிய திறன் கொண்ட அவர் கலாசார, இலக்கிய ஆன்மிக, அரசியல் தளங்களில் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சிகளுக்காக மதிப்புடன் போற்றப்படுபவர்.இத்தகைய மகாகவிக்கு தமிழ்நாட்டில் தேவையான கவுரவம் கிடைக்க வேண்டும். அவருடைய கவிதைகளை தமிழ் மக்கள் மறுபடியும் பாட வேண்டும். எல்லா இடங்களிலும் அவர் கவிதைகள் ஒலிக்க வேண்டும்.

யோகா என்பது ஒரு பயிற்சி அல்ல. அது ஒரு உள் அனுபவம். இந்த அனுபவத்தை பெறுவது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியம். ஒரு மனிதர் எந்த செயல் செய்தாலும் அதில் ‘நான்’ என்ற தன்மையை கரைத்து முழு ஈடுபாடாக செய்தால் இந்த யோகா அனுபவத்தை அடைய முடியும். இது தான் நன்மைக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படை. மனிதனின் முக்திக்கும் அடிப்படை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்