நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்ததற்கு தி.மு.க.வே காரணம்: எச்.ராஜா

கடலூர் அருகே ராமாபுரத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2021-09-13 21:37 GMT
நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்ப்பது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது போன்ற தீய செயல்களில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாகவே சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து இருக்கிறார். மாணவர் தற்கொலைக்கு முழுக்க, முழுக்க காரணம் முதல்-அமைச்சர், தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் காரணமாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசு நினைத்தாலும் நீட் தேர்வை மாற்ற முடியாது.

அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழக சட்டசபையில் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முதல்-அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

மேலும் செய்திகள்