மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - எடப்பாடி பழனிசாமி

மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-14 07:41 GMT
சென்னை,

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த மாணவி கனிமொழி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற தவறாக எண்ணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்றிருந்தார். 

இந்நிலையில், அரியலூர் மாணவி கனமொழி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

நீட்தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும் , குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன், திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். 

மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்