ஆசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு

காணொலிக்காட்சி மூலம் அனைத்து சபாநாயகர்கள், கலந்துகொண்ட ஆசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடந்தது.இதில் புதுவை அலுவலகத்தில் இருந்தபடி சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டார்.

Update: 2021-09-15 13:45 GMT
புதுச்சேரி
1921-ம் ஆண்டு சிம்லாவில் அனைத்து இந்திய பேரவை தலைவர்களின் மாநாடு நடந்தது. அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் காணொலிக்காட்சி மூலம் அனைத்து சபாநாயகர்கள், ஆசிய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை தாங்கினார். இதில் புதுவை அலுவலகத்தில் இருந்தபடி சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டார்.
மாநாட்டில் சபாநாயகர் செல்வம் பேசுகையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் மக்களின் நலன், ஜனநாயக மாண்பை காக்கும் வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. 33 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சபையில் 16 பேர் புதிய உறுப்பினர்கள் ஆவார்கள். சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர் என்றார்.

மேலும் செய்திகள்