பிளஸ்-2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்

பிளஸ்-2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் தமிழக அரசு ஏற்பாடு.

Update: 2021-09-15 21:02 GMT
சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in-ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 17-ந் தேதி (நாளை) வழங்கப்பட உள்ளதையடுத்து 17-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

இந்த தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்