இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நின்றது.

Update: 2021-09-19 20:29 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நின்றது. தகவல் அறிந்த வனத்துறையினரும், இந்திய கடலோர காவல்படையினரும் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் அங்கு சென்றனர். அதற்குள் படகில் இருந்த சிலர் கடலில் குதித்து நீந்தி தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகின்றது.

அந்த படகில் சுமார் 130 சாக்கு மூட்டைகளில் இறந்த 1,500 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினரும், வனத்துறையினரும் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் நாட்டு படகையும் வனத்துறை அதிகாரிகள் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய்ஆனந்த் உத்தரவின் பேரில் அந்த கடல் அட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்