சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

Update: 2021-09-22 00:32 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதிலும் குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும் சென்னையில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்