“திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட மசோதா தயாராக உள்ளது” - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட மசோதா தயாராக உள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-09-28 13:42 GMT
சென்னை,

சென்னை அயனாவரம் ரவுடி ஜோசப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட மசோதா தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 

மேலும் செய்திகள்