தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Update: 2021-10-03 21:29 GMT
கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம், தேவதானப்பட்டி தடுப்பூசி முகாம்களை சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.  அதன்பின்னர் அவர் கூறும்போது, கடந்த செப்டம்பர் 12ந்தேதி நடைபெற்ற முதல் முகாமில் தமிழகத்தில் 28 லட்சம் பேர், 2வது முகாமில் 16 லட்சம் பேர், 3வது முகாமில் 26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.

4வது முகாமில் (நேற்று) 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  கேரளாவின் நிபா, ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்