ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: தற்போதைய முன்னிலை நிலவரம்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Update: 2021-10-13 03:31 GMT
சென்னை, 

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதுதவிர ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சைகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதன் பின்னர் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், தற்போதைய முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:-

தி.மு.க. - 987 இடங்களிலும், அ.தி.மு.க. - 198 இடங்களிலும், மற்றவை 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட கவுன்சிலர் முன்னிலை நிலவரம் :-

தி.மு.க. - 133 இடங்களிலும், அ.தி.மு.க. - 2 இடங்களிலும், மற்றவை 0 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் பல இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 2-வது இடத்தையே அ.தி.மு.க. பெற்றுள்ளது. இதேபோல் பல ஊராட்சிகளில் தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர்.

மேலும் செய்திகள்