மத்திய அரசு அனுமதி அளித்தவுடன்: 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அமைச்சர் தகவல்

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-10-13 20:21 GMT
கோவை,

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கோவை மாநகராட்சியில் மண்டல வாரியாக நடமாடும் தடுப்பூசி மையங்களையும், அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசி செலுத்துவதில் கோவை தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. செலுத்தப்பட்டுள்ளது. 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தப்படும். இதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக பணிகளை தொடங்கும். பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.

வழிபாட்டு தலங்கள்

அம்மா கிளினிக் ஒரு குறுகிய காலத்திட்டம். அந்த திட்டம் முடிவடைந்து விட்டது. அம்மா கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் முடிவுகளை அறிவிப்பார். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வர இ-பாஸ் முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்