மன்மோகன் சிங் விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;

Update:2021-10-14 12:18 IST
சென்னை, 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அவர்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்