சென்னையில் 12 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் - கமிஷனர் உத்தரவு

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 6 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.;

Update:2026-01-08 00:59 IST

சென்னை,

சென்னையில் 12 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்களில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 6 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய விமல், ஆதம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார். மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விஜயகாந்தும், வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்துக்கு ராஜ்பிரபுவும், அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு சதீஷ்குமாரும், கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்துக்கு ரபீக் உசேனும், அபிராமபுரத்துக்கு முகுந்தனும், கோட்டூர்புரத்துக்கு ஆனந்தகுமாரும் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டனர்.

ராதாகிருஷ்ணன், விஜயரங்கன், தளவாய்சாமி, ராமசுந்தரம் ஆகியோர் சென்னை உளவுப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டனர். இதேபோல், தங்கமணி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்