ரூ.1.21 கோடி கட்ட தவறியதால் மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல்...

பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

Update: 2021-10-14 11:58 GMT
சென்னை

மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி, 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இவர் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் சில மாதங்கள் தவணை முறையாக காட்டியுள்ளார். ஆனால், அதன்பிறகு தொடர்ந்து பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலை சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.ஆனால், அதற்கு உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்ததால், அந்த நிதி நிறுவனம்  மெட்ரோபாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து வழக்கறிஞர், கமிஷன் வினோத்குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டு சாவி பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்