காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி

காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி.

Update: 2021-10-15 21:18 GMT
சென்னை,

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேரிய வழியில் உழைத்துயர முடியும் என நிரூபித்தவர். இந்த தேசம் செல்ல வேண்டிய திசையை காட்டியவர். பல கோடி இந்தியர்களை லட்சிய கனவுகளை நோக்கி செலுத்தியவர். காந்திக்குப்பிறகு காலம் நமக்கு அளித்த இன்னொரு தேசப்பிதாவான அப்துல் கலாம் பிறந்த நாளில், அவர் வழி நின்று அறவழி செல்வோம்” என்று தெரிவித்து உள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சாதிக்க வேண்டும் என்ற கனவும், உறுதியாக சாதிப்போம் என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர். அவரது நினைவுகளை போற்றி வணங்கிடுவோம்” என்று தெரிவித்து உள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு, கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்