சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஐ.பி.எல். போட்டியில் 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அணியிடம் இருந்து அருமையான ஆட்டம் வெளிப்பட்டது. 4-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கிலும் இருக்கிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வெற்றியை கொண்டாட சென்னை, தோனிக்காக அன்புடன் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
Fantabulous performance from @ChennaiIPL!
— M.K.Stalin (@mkstalin) October 15, 2021
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove#IPLFinalpic.twitter.com/N3V8khxrMO