“சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை“- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-10-20 09:08 GMT
சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.  நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என அனைத்துமே நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று ஏற்கெனவே தெளிவுப்பட தெரிவித்துவிட்டனர். 

அதனால், சசிகலா பேசுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை. ஊடகங்களே அவர் பேசுவதை பரப்பரப்பிற்காக பெரிதுப்படுத்துகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருவதாகவும், மடியில் கனம் இல்லை விழியில் பயம் இல்லை.5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே திமுக செய்து வருகிறது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்