2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

Update: 2021-10-22 23:20 GMT
சென்னை,

சென்னை அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்தியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தடுப்பூசி போட்டுக் கொள்வது தவறான விசயம் அல்ல என்று முழுமையான அளவில் விழிப்புணர்வு ஏற்படும். தமிழகத்தில் தற்போது 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 57 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே தமிழகத்தில் பாதிப்பு குறைந்துள்ளது என தடுப்பூசி போடாமல் இருப்பது, பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்