வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி முக்குலத்தோர் புலிப்படை வரவேற்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி முக்குலத்தோர் புலிப்படை வரவேற்பு.

Update: 2021-11-01 23:50 GMT
சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். அது உண்மையான சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றியாகும்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்