பல்கலைக்கழக அழைப்பிதழில் இந்தி முழக்கம் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பல்கலைக்கழக அழைப்பிதழில் இந்தி முழக்கம் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

Update: 2021-12-08 19:27 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற இந்தி முழக்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது.

அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்பு தான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?

ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்