தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் வி.திருவள்ளுவனை நியமித்து, தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-12-11 22:00 GMT
வி.திருவள்ளுவனுக்கு பணி நியமன ஆணையை கவர்னர் வழங்கினார். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 3 ஆண்டுகள் அவர் அப்பொறுப்பு வகிப்பார்.

வி.திருவள்ளுவன், தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியராக உள்ளார். கற்பித்தல் சேவையில் 28 வருட அனுபவம் மிக்கவர். 5 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தேசிய கல்வி-ஆராய்ச்சி நிகழ்வுகளில் 4 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கல்வி-ஆராய்ச்சி சேவைக்காக தேசிய அளவில் 5 நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளார். 9 ஆராய்ச்சி திட்டங்களை நிறைவேற்றியதுடன், 12 ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். 

பல்கலைக்கழக நிர்வாகங்களில் பொறுப்பு வகிப்பதில் இவர் 8 ஆண்டு அனுபவம் கொண்டவர். இயக்குனர், மொழியியல் துறை டீன் போன்ற பொறுப்புகளை வகித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராகவும், பதிவாளராகவும், சிண்டிகேட் உறுப்பினராகவும், புதுச்சேரி மொழியியல் - கலாசார மையத்தின் வழிகாட்டு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்