ஊரடங்கால் கோவில்கள் மூடல்; வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழக அரசின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் இன்று மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-07 12:41 GMT

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.  இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்த‌து.

ஆனாலும் கோவில்களில் சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் நடை பெற்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் கோவில் முன்பு பூக்களை வைத்தும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர். சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) கோவில்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



இதேபோன்று, தமிழக அரசின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் திறக்கக்கூடாது என்ற அறிவிப்பின்படி கோவில்கள் மூடப்பட்டு உள்ள சூழலில், பக்தர்கள் கோவில் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் உள்ளே சிவாச்சாரியார்கள் வழக்கம்போல் பூஜைகள் செய்தனர். பக்தர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.




ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி யாத்திரை செல்வதாக இருந்த நிலையில் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் வேறு வழியின்றி கோயில் வாசல்களிலும் திருமண மண்டபங்களிலும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்