மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,565 கன அடியாக குறைவு

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.56 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2022-01-09 03:28 GMT
மேட்டூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.56 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 88.09 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,576 கன அடியில் இருந்து 2,565 கன அடியாக குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்