சீசன் டிக்கெட்களில் தடுப்பூசி சான்றிதழ் எண் தெற்கு ரெயில்வே புதிய நடவடிக்கை

சீசன் டிக்கெட்களில் தடுப்பூசி சான்றிதழ் எண் தெற்கு ரெயில்வே புதிய நடவடிக்கை.

Update: 2022-01-09 19:01 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில், தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று (திங்கட்கிழமை) முதல் மின்சார ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என நேற்று முன்தினம் தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அந்தவகையில் சாதாரண பயணிகளும், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளும், கட்டாயம் டிக்கெட் கவுண்ட்டருக்கு வரும் போதும், மின்சார ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் போதும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும், இன்று (10-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் தெற்கு ரெயில்வே அதன் அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

வரும் நாட்களில் சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி சான்றிதழின் எண் அச்சிட தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் தடுப்பூசி சான்றிதழின் கடைசி 4 எண்கள் சீசன் டிக்கெட் களில் அச்சிடப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்