குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது

புதுவையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-13 18:31 GMT
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அருள் என்கிற பழனி (வயது 22). பிரபல ரவுடியான இவர் மீது 2 வெடிகுண்டு வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அருளால் அந்த பகுதியில் சட்டம்-ஓழுங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனை தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மூலமாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் வல்லவன், அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் பகுதியில் பதுங்கி இருந்த அருளை இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்