அரசு பணி வழங்க வேண்டும்: ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த பிரபாகரன் பேட்டி

ஜல்லிக்கட்டில் வென்ற மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று முதல் இடம் பிடித்த பிரபாகரன் கூறினார்.

Update: 2022-01-15 12:02 GMT
மதுரை,

மதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 காளைகள் பங்கேற்றன. 300 மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5 மணியளவில் நிறைவு அடைந்தது. 

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிரபாகரன் என்ற இளைஞர் பிடித்தார்.  மதுரை மாவட்டம் பெதும்பை பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஓட்டுநர் ஆவார். முதல் இடம் பிடித்ததற்காக இவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. பிரபாகரன் ஏற்கனவே கடந்த 2020,2021- ஆம் ஆண்டும் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்து உள்ளார். 

3-வது முறையாக பாலமேடு  ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த  பிரபாகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், “ ஜல்லிக்கட்டில் வென்ற மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்