கொரோனா பரவல்; 6 நாட்களுக்கு ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கொரோனா பரவலை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

Update: 2022-01-22 16:22 GMT
சென்னை,



நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.  அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவலால் 4 பயணிகள் ரெயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் -கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில் நாகர்கோவில்-கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம்-திருவனந்தபுரம், கோட்டயம்-கொல்லம், திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்