மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை

மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை 100 நாட்கள் இலக்கை 92 நாட்களிலேயே எட்டினார்.

Update: 2022-01-24 18:52 GMT
சென்னை,

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடுமையான பணிச்சுமைகளுக்கும் மத்தியிலும் உடல்நலத்தில் தனி கவனம் செலுத்துபவர். பல்வேறு நாடுகளில் நடந்துள்ள மாரத்தான் ஓட்டங்களிலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

அந்தவகையில் தேசிய பிறர் மீது அக்கறை செலுத்தும் தினமான கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி ‘கூடுமானவரை அனைவர் மீதும் அக்கறை செலுத்தவேண்டும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓட்டம் தொடங்கினார். இதில் 100 நாட்களில் 1,000 கி.மீ. தூரம் ஓடுவது என்பது அவர் இலக்காகும். பல்வேறு பணிகளுக்கு இடையேயும் அவர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிவந்தார்.

இந்தநிலையில் மாரத்தான் தொடங்கி 92-வது நாளில் (நேற்று) அவர் 1,009.86 கி.மீ. ஓட்டத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் 100 நாட்களில் ஓடவேண்டிய இலக்கை 92 நாளிலேயே எட்டி அவர் சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்