மாணவி லாவண்யா மரணத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்

மாணவி லாவண்யா மரணத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.

Update: 2022-01-25 18:54 GMT
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் 2-வது திட்டத்துக்கு கர்நாடக நீர்வளத்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது தவறு. இந்த விஷயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக அரசின் பக்கம் உறுதியாக நிற்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுகின்றன. தற்போதுகூட இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சுமுக தீர்வை காண வேண்டும்.

அரியலூர் மாணவி லாவண்யா மதம் மாற சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டதாக தமிழக பா.ஜ.க. கூறுகிறது. அந்த மாணவியின் வீடியோவில் 2 வருடங்களுக்கு முன்னதாக மதம் மாறச்சொன்னதாக கூறப்படுகிறது. அதற்காக இப்போது தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது பொருத்தமாக இல்லை. இதை பா.ஜ.க.வினர் அரசியல் நோக்கத்துக்காக செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்