மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவியேற்பு

மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2022-03-04 10:11 GMT
மதுரை,

மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக 67 வார்டுகளையும், காங்கிரஸ் 5 வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளையும், மதிமுக 3 வார்டுகளையும், விசிக ஒரு வார்டையும் கைப்பற்றினர். அதிமுக 15 வார்டுகளையும், பாஜக ஒரு வார்டையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றியது

திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றதால் தனிபெரும்பன்மையுடன் அக்கட்சியை சேர்ந்த ஒருவர் மேயராவது உறுதியானது.

மேயர் பதவிக்கு 57-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி மதுரை மாவட்ட திமுக அமைச்சர்களால் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டார். இவரின் கணவர் பொன்வசந்த் வழக்கறிஞராக உள்ளார். ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார். இவர், மாவட்ட மாணவர் துணை அமைப்பாளராகவும், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற எம்.பி வெங்கடேசன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு செங்கொலை வழங்கினர். 


மேலும் செய்திகள்