கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்

சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-03-25 05:28 GMT
கள்ளக்குறிச்சி,

இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு சென்று வருவதாக போக்குவத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து கள்ளக்குறைச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் சின்னசேலம் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பள்ளி மாணவர்களை பிடித்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கு வாகனங்களை வழங்கக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர். அதே போல் 125 சி.சி.க்கு மேல் உள்ள வாகனங்களை ஓட்டக்கூடாது என மாணவர்களிடம் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்