டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்தது

கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்தது.

Update: 2022-04-18 13:16 GMT
சென்னை,

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கார் விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்தது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்த நிலையில், தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடலை பெற்றுக்கொண்டர். 

இதையடுத்து வேன் மூலம் சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு தீனதயாளனின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்