கன்னியாகுமரியில் 147 அடி உயர ராட்சத தேசியக் கொடிக்கம்பம்..!

இந்தியாவின் தென்கோடி முனையில் மிக உயரமான தேசிய கொடி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-08 10:17 GMT
கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லியில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. 

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள ரவுண்டனா சந்திப்பில் ரூ.60 லட்சம் செலவில் 147 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. ’

இந்தப் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற உள்ளது என்றும், இந்த 147 அடி உயர ராட்சத தேசிய கொடிக்கம்பத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூலம் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்