செங்கல்பட்டில் சூறாவளி காற்றுடன் கனமழை; காற்றில் பறந்த ரெயில்நிலைய மேற்கூரை

செங்கல்பட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் செங்கல்பட்டு ரெயில்நிலைய மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

Update: 2022-05-10 10:12 GMT
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் அதிவேக காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் இருளில் இருந்தனர். 

குறிப்பாக புலிப்பாக்கம், கொளவாய் ஏரி அருகேயுள்ள ரெயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் அதிகாலையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் நித்தப்பட்டன. உடனே சம்பவயிடத்திற்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் ரெயில் சேவை தொடங்கின. இதனால் ரெயில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிப்பட்டது.

மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் மேல்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் பயணிகள் நிற்கும் சிமெண்ட் சீட்டுகள், தகர சீட்டுகள் ஆங்காங்கே பறந்தன. அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. 

இதுபோல செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்கப்பட்டு ரெயில் நிலையம் வரும் வழியில் அனைத்து மரங்களும் சூறாவளி காற்றில் முறிந்து விழுந்து. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

நேற்று நள்ளிரவு திடீர் காற்றுவீசியதால் மின் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக மின்வெட்டை சரிசெய்யும் பணிதீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்