சென்னையில் 36-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் ...!

சென்னையில் தொடர்ந்து 36-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

Update: 2022-05-12 01:18 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து 36-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்