"1250 கிராமப்புற கோயில்களில் திருப்பணி" - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு !
தமிழகத்தில் 1250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி நிதி ஒதுக்கி இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் 1250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி நிதி ஒதுக்கி இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் கிராமப்புற திருக்கோவில் திருப்பணி திட்டத்தின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சார்நிலை அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் படி, 1250 கோவில்கள் இறுதிசெய்யப்பட்டு பெயர்விவரப்பட்டியல் வலைதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெறப்படும் எனவும், மண்டல இணை ஆணையர் முன்னிலையில் கோவில்களின் திருப்பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.