காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் சீரமைக்கும் பணி மும்முரம்...!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.;
காஞ்சிபுரம்,
உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவின் முக்கிய உற்சவமான தேர் திருவிழா வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பிரம்மோற்சவம் நடப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காந்திரோட்டில் நிலை கொண்டுள்ள தேரின் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் நல்ல நிலையில் உள்ளதா போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் 73 அடி உயரமுள்ள தேரை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில் 2 ஆண்டுகள் பிறகு நடைபெறும் தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.