‘இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுதான்’ - அன்புமணி ராமதாஸ்

இந்தியாவிலேயே அதிக வட்டி கட்டும் மாநிலமும் தமிழ்நாடுதான் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.;

Update:2025-12-28 06:36 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழ்நாட்டில் நிர்வாகம் என்ற ஒன்றே கிடையாது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே முதல்-அமைச்சருக்கு தெரியாது. கடனை மட்டும் அதிகமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். 9 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுதான்.

மேலும், இந்தியாவிலேயே அதிக வட்டி கட்டும் மாநிலமும் தமிழ்நாடுதான். ஆண்டுக்கு 62 ஆயிரம் கோடி வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறோம். நமக்கு அடுத்த இடத்தில்தான் உத்தர பிரதேசம் இருக்கிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகை தமிழ்நாட்டை விட 3 மடங்கு அதிகம்.

தமிழ்நாட்டில் கடன் வாங்குவது எதற்கு என்றால், அன்றாட செலவுகளுக்காக வாங்குகிறார்கள். இது எவ்வளவு கொடுமையானது. கடன் என்றால் அதில் மூலதன முதலீடு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வீடு கட்டுவதற்கு கடன் வாங்கலாம். ஆனால் அந்த வீட்டிற்குள் வாழ்வதற்கும், சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் கடன் வாங்கக் கூடாது. தமிழ்நாடு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.”

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்