திருப்பூர்: தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவரில் லாரி மோதி விபத்து - டிரைவர் காயம்

உடுமலை அருகே தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயம் அடைந்துள்ளார்.;

Update:2022-05-17 10:29 IST
உடுமலை,

பழனியிலிருந்து அதிகாலை பொள்ளாச்சி நோக்கி அதிக  பாரம் ஏற்றிக்கொண்டு  லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.  இந்த லாரி பழனி ரோட்டில் வந்த போது  திடிரென கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவரில் மோதி  விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தனது. மேலும் விபத்து நடந்தது காலை நேரம் என்பதால் அசம்பாவிதம் சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்தார். இதுகுறித்து உடுமலை போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்