வைரஸ் காய்ச்சலுக்கு 25 பேர் அனுமதி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 25 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.;

Update:2022-12-04 00:15 IST

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 25 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காலநிலை மாற்றம்

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. தற்போது மழை குறைந்து இரவில் பனி கொட்டுகிறது.

இதற்கிடையில் கொசு உற்பத்தி அதிகரிப்பதால் டெங்கு உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும், பிற வைரஸ் காய்ச்சலுக்கு 20 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

இதுபோன்ற காலநிலைகளில் குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்